ICAR ஆணையத்தில் Young professional வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.30,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
ICAR-Sugarcane Breeding Institute ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional I பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Young Professional I பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Agriculture / Horticulture / Chemistry / Life Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECHS ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.75,000/- || நேர்காணல் மூலம் தேர்வு!
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 06.11.2024 ம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























