தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்…!! ” அரசின் அசத்தல் அறிவிப்பு”..!!

0
??????? ?????? ???? ???? ?????????...!! " ?????? ??????? ?????????"..!!
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்...!! " அரசின் அசத்தல் அறிவிப்பு"..!!
தீபாவளி பரிசாக இலவச கேஸ் சிலிண்டர்…!! ” அரசின் அசத்தல் அறிவிப்பு”..!!

நாட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் உள்ள மக்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு திட்டங்களை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதை பற்றி கீழே விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

மக்களே..இனி கரண்ட் பில் கட்ட தேவையில்லை..அரசு அறிவிப்பு !! “வந்தாச்சு புதிய திட்டம்”..!!

அதாவது, சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முன்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள், தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது அவர் மக்களை கவரும் விதமாக ஏழை பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் திட்டம் வரும் அக்டோபர் 31 தீபாவளி பண்டிகை திருநாளில் இருந்து அமல்படுத்தப்படும் என்றும், பயனாளிகளுக்கு 4 மாதங்களுக்கு 1 முறை இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்தை செலுத்தி விட்டு சிலிண்டர் பெற வேண்டும் என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் பணம் உங்கள் கணக்கில் மீண்டும் வரவு வைக்கப்படும் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!