IBPS SO நேர்காணல் – நுழைவுச்சீட்டு சற்றுமுன் வெளியீடு!

0
IBPS SO நேர்காணல் - நுழைவுச்சீட்டு சற்றுமுன் வெளியீடு!

வங்கிப் பணியாளர் தேர்வாணையம் ஆனது IBPS SO பிரிவின் கீழ்வரும் பதவிகளின் நேர்காணலுக்கான நுழைவுச் சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தேர்வர்கள் பதிவின் மூலம் எளிமையாக பெற்றுக்கொள்ளலாம்.

IBPS SO நுழைவுச்சீட்டு:

வங்கிகளில் Specialist Officer பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென 2023 – 2024 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1402 காலியிடங்களுக்கான அறிவிப்பானது 31.07.2023 அன்று IBPS தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கான IBPS SO Preliminary Exam 30.12.2023, 31.12.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு முடிவுகளானது 16.01.2024 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து Main Exam ஆனது 28.01.2024 திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. மேலும் இத்தேர்வின் முடிவுகள் 16.02.2024 அன்று வெளியிடப்பட்டது.

KRCL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

இந்நிலையில் SO பதவிகளின் நேர்காணலுக்கான நுழைவுச் சீட்டானது https://www.ibps.in/ என்ற இணையதள முகவரியில் இன்று (22.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இந்த நுழைவுச் சீட்டை பெற விரும்பும் தேர்வர்கள் Login பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் கடவுச் சொல்லை சரியாக உள்ளிட வேண்டும். மேலும் தேர்வர்கள் இந்த நுழைவுச் சீட்டை 07.03.2024 அன்று வரை பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!