PF கணக்குடன் LIC பாலிசிகளை இணைப்பது எப்படி? முழு விவரம் இதோ!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பாலிசிகளை ஒன்றாக இணைப்பது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு
இந்திய மக்கள் ஓய்வு காலத்தில் பயனுள்ளதாக இருக்க, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) பாலிசி தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டும் இபிஎஃப் (EPF) பங்களிப்புகள் ஓய்வூதிய கார்பஸை உருவாக்குவதற்காகவே, எல்ஐசி (LIC) பாலிசிகள் சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் தொகை என இரட்டை பலன் கிடைக்கிறது. இந்நிலையில் எல்ஐசி பிரீமியங்களைச் செலுத்த முடியவில்லை என்றால், நீங்கள் இபிஎஃப் (EPF) சேமிப்பை நம்பி இருக்கலாம். அதற்கு எல்.ஐ.சி பாலிசியை பிஎஃப் கணக்குடன் இணைக்க வேண்டும்.
தமிழக மருத்துவத்துறையில் 5000 காலிப்பணியிடம் நிரப்பல் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!
இதற்கு முதலில் அருகிலுள்ள இபிஎஃப்ஓ அலுவலகத்தில் படிவம் 14ஐச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, பிஎஃப் கணக்கைப் பயன்படுத்தி எல்ஐசி பிரீமியங்களைச் செலுத்த அனுமதிக்குமாறு இபிஎஃப் (EPF) ஆணையரிடம் கேட்க வேண்டும். இருந்தாலும் படிவம் 14 சமர்ப்பிப்பின் போது, PF கணக்குகளில் உள்ள நிதியானது வருடாந்திர எல்ஐசி பிரீமியம் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இந்த வசதி எல்ஐசி பிரீமியம் செலுத்துவதற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. பிற காப்பீட்டு பிரீமியங்களை பிஎஃப் கணக்கு மூலம் செலுத்த முடியாது.