கல்விக்கட்டணம் வசூலிப்பதில் தனியார் பள்ளிகள் அடாவடி – வலுக்கும் கோரிக்கை!!
தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு வற்புறுத்தும் நிலையில் பெற்றோர்கள் முக்கிய கோரிக்கையை வைத்துள்ளனர்.
கல்வி கட்டணம்:
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் ஜெகன்னா வித்யா தீவேனாவின் கீழ் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை விரைவில் செலுத்தக்கூறி வற்புறுத்துவதாக பெற்றோர்கள் குற்றசாட்டை வைத்துள்ளனர். அதாவது, பள்ளிக்கட்டணம் செலுத்த நவ.24 வரை கால அவகாசம் இருந்தும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் உடனடியாக கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவதாக குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – 12ம் வகுப்பு / டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!
இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகளுடன் பலமுறை புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, PAAP அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு கல்விக்கட்டணம் குறித்த அறிவிப்பை வெளியிடும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.