PF கணக்கு வச்சுருக்கீங்களா? UAN நம்பர் பெறுவது எப்படி தெரியுமா?

0

PF கணக்கு வச்சுருக்கீங்களா? UAN நம்பர் பெறுவது எப்படி தெரியுமா?

ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு UAN என்பது முக்கியமான ஒன்றாகும். UAN என்பது Universal Account Number ஆகும். இந்த எண்ணை பயன்படுத்தி பயனர்கள் EPF கணக்கை கண்காணிக்கவும் ஆன்லைன் மூலம் சரிபார்க்கவும் முடியும். ஊழியரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட PF கணக்கு இருக்கும்பட்சத்தில் UAN ஐ பயன்படுத்தி கணக்கு குறித்த விவரங்களை ஒரே இடத்தில் பார்க்க முடியும்.

Post Office இல் பணம் சேமிக்க விருப்பமா? அப்போ இந்த திட்டத்தை  பயன்படுத்துங்க!

இதற்கு பயனர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in க்குள் நுழைய வேண்டும். அதில் சேவை விருப்பத்தினை கிளிக் செய்து உறுப்பினர் UAN அல்லது ஆன்லைன் சேவைக்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ஸ்கிரீனில் தெரியும் Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக உறுப்பினர் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான் எண் ஏதாவது ஒன்றை உள்ளிட வேண்டும். பின்பு உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். அதன்பின் கேப்ட்சாவை டைப் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவை அனைத்தும் சரியாக செய்யும் பட்சத்தில் யுஏஎன் ஆர்டர் வழங்கப்படும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!