நல்ல கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி? உடனே தெரிஞ்சுக்கோங்க!

0

நல்ல கிரெடிட் ஸ்கோர் பெறுவது எப்படி? உடனே தெரிஞ்சுக்கோங்க!

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் அனைத்தும் டிஜிட்டல் மாயமாகியுள்ளது. இதனால் பண பரிவர்த்தனைகள் அதிக அளவில் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. வங்கியில் இருந்து கடன் பெறுவதற்கு முன், வங்கி பிரதிநிதிகள் முதலில் நீங்கள் கடனுக்குத் தகுதியானவரா என்பதை சரிபார்க்கிறார்கள். அதைச் சரிபார்க்க முதல் விஷயம் உங்கள் கடன் மதிப்பெண்ணைப் பார்ப்பதுதான்.

விரைவில் இந்தியாவுக்கு வருகிறது ஸ்டார்லிங்க் சேவை – முழு விவரங்களுடன்!

குறுகிய காலத்தில் அடிக்கடி கடன்கள் பெறுவது அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பது உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைக்கும். எனவே அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே கடன் உதவி பெறுவது நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், நீங்கள் வாங்கிய கடனை தவறாமல் மதிப்பாய்வு செய்து, அதில் உள்ள முரண்பாடுகளை உடனடியாக சரி செய்வதன் மூலம் தேவையற்ற சிக்கலை தவிர்க்க முடியும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, உங்கள் மாதாந்திர EMI களை சரியான நேரத்தில் தவறாமல் கட்டுவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை உயர்த்தக் கூடும். இறுதியாக எந்தவிதமான கடனாக இருந்தாலும் அதை 70% குறைவாக உபயோகிப்பதன் மூலம் உங்களின் நிதி நிலைமை எளிதாக மேம்படுத்தலாம் என நிதி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!