
பெற்றோர்களுக்கு குட் நியூஸ்..!! இனி சுலபமா பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்…!! எப்படி தெரியுமா..?
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்வது என்பது கட்டாயமாகும். மேலும், எந்த அரசு சான்றிதழை பெற வேண்டும் என்றாலும் அதற்கு முதலில் கேட்கப்படுவது பிறப்பு சான்றிதழே ஆகும். மேலும், ஒரு குழந்தையின் பிறப்பை பதிவு செய்யும் முறையையும், அத்துடன், அதனை சான்றிதழ் வடிவில் பெறும் முறையையும் அரசு தற்போது எளிமையாக்கியுள்ளது. மேலும், அதனை பெறும் வழிமுறைகளை கீழே விரிவாக காணலாம்.
அட., ஏடிஎம் கார்டில் இந்த வசதி எல்லாம் இருக்க..!! அந்த சூப்பர் வசதியை தெரிஞ்சுக்க இத படிங்க…!!
அதாவது, அரசு இதற்காகவே https://www.crstn.org/birth_death_tn/ என்ற இணையதள பக்கத்தை உருவாக்கியுள்ளது. இதில், குழந்தை பிறந்த இடம், பெற்றோர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் போன்ற தகவல்களை கொடுத்து, குழந்தையின் பெயர் இன்றி கூட பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின், ஒரு வருடத்திற்குள் குழந்தையின் பெயரை அதில் இணைத்து விட வேண்டும். இல்லையெனில், ரூ.200 கட்டணம் செலுத்தி பதிவு செய்ய நேரிடும்.























