Post Office கணக்கு வைத்துள்ளீர்களா? உங்க பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? அறிந்து கொள்ள வழிகள் இதோ!

0
Post Office கணக்கு வைத்துள்ளீர்களா? உங்க பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? அறிந்து கொள்ள வழிகள் இதோ!
Post Office கணக்கு வைத்துள்ளீர்களா? உங்க பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? அறிந்து கொள்ள வழிகள் இதோ!
Post Office கணக்கு வைத்துள்ளீர்களா? உங்க பேலன்ஸ் எவ்வளவு தெரியுமா? அறிந்து கொள்ள வழிகள் இதோ!

இந்தியாவில் அஞ்சல் துறை சாமானிய மக்களை கருத்தில் கொண்டு எண்ணற்ற சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இத்தகைய திட்டங்களில் கணக்கு தொடங்கியுள்ள்ளவர்கள் தங்களது இருப்புத்தொகை குறித்த விவரத்தை எளிதாக ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

சேமிப்பு கணக்கு:

இந்தியாவில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அஞ்சல் துறையில் கணக்கு தொடங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச டெபாசிட் தொகையை கொண்டு அஞ்சலக திட்டங்களில் சேரலாம். மேலும் வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் படி வரி விலக்கும் உண்டு. அதனால் சாமானிய மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் கணக்கு தொடங்க ஆர்வம் காண்பிக்கின்றனர்.

தமிழக 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான தேதி வெளியீடு!

இன்றைய டிஜிட்டல் உலகில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் சேருவது மிகவும் எளிது வீட்டிலிருந்தபடி ஆன்லைன் வாயிலாகவே கணக்கு தொடங்கி விடலாம். அதுமட்டுமல்ல ஆன்லைன் வாயிலாக உங்களது கணக்கில் உள்ள இருப்பு தொகையையும் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதியை பெற நினைப்பவர்கள் கட்டாயம் சேமிப்பு கணக்குடன் மொபைல் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ஆன்லைன் மூலம் அஞ்சலக கணக்கு இருப்பு நிலை அறியும் முறைகள்:
  • முதலில் அஞ்சலகத்தில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதனை பயனர் குறியீடு மற்றும் கடவுச்சொல் கொண்டு Login செய்யவும்.
  • பின் செயலியில் உள் நுழைந்து Balance & Statements என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்தாக Mini Statement என்பதை தேர்தெடுத்து அடுத்து வரும் பக்கத்தில் உங்களது இருப்பு தொகை காண்பிக்கப்படும்.
  • மேலும் மொபைல் SMS வாயிலாகவும் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம். அதாவது மொபைலில் REGISTER என டைப் செய்து 7738062873 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும். பிறகு BAL என்று டைப் செய்து அனுப்பி இருப்புத் தொகையை அறியலாம்.
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!