தமிழக 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான தேதி வெளியீடு!

0
தமிழக 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான தேதி வெளியீடு!
தமிழக 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு - அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான தேதி வெளியீடு!
தமிழக 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – அறிவியல் செய்முறைத் தேர்வுக்கான தேதி வெளியீடு!

தமிழகத்தில் தனித்தேர்வர்கள் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வை ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி இத்தேர்வில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வுக்கான அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

செய்முறைத் தேர்வு

தமிழகத்தில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து 10ம் வகுப்பில் ஏற்கனவே அறிவியல் பாடத்திற்கான செய்முறை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கான அறிவியல் தனித்தேர்வுக்கான அறிவிப்பை அரசு தேர்வு துறை இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பரிசோதனை – கேரளா அரசு அறிவிப்பு!

இந்த அறிவிப்பில், நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெறாமல் இருக்கும் தனித்தேர்வர்கள் மார்ச் 20ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற இருக்கும் அறிவியல் பாட செய்முறை தேர்வில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளில் இத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனித்தேர்வர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு உங்களின் முகவரிக்கு கிடைக்கவில்லையெனில், இந்த அறிவிப்பை பார்த்து அறிவியல் செய்முறை தேர்வில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!