பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் எப்படி செக் பண்ணனும் தெரியுமா? உடனே கிளிக் பண்ணுங்க!

0

பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் எப்படி செக் பண்ணனும் தெரியுமா? உடனே கிளிக் பண்ணுங்க!

இன்றைய நாட்களில் கிரெடிட் ஸ்கோர் என்பது எல்லா வகையிலும் அனைவருக்கும் தேவைப்படும் முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக கடன் வாங்குபவர்களுக்கு இந்த கிரெடிட் ஸ்கோர் கார்டு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த கிரெடிட் ஸ்கோர் கார்டை சரிபார்க்க பலமுறை பான் எண் தேவைப்படும் ஆனால் பான் இல்லாமல் அதை சரி பார்க்கும் வழிமுறைகளை கீழே வழங்கி உள்ளோம்.

பான் கார்டு இல்லாமல் கிரெடிட் ஸ்கோரை CIBIL என்ற இணையதளத்தின் மூலம் எளிதாக சரி பார்க்கலாம். இதற்கு சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து பகிர வேண்டும். இதற்கு சில கட்டணங்களையும் செலுத்த வேண்டி இருக்கும்.

செக் செய்யும் எளிய வழிமுறைகள்:

1. அதிகாரப்பூர்வ சிபில் இணையதளத்துக்குச் சென்று, ‘பெர்சனல் சிபில் ஸ்கோர்’ என்ற விருப்பத்தைத் தொடர்ந்து ‘உங்கள் இலவச சிபில் ஸ்கோரைப் பெறுங்கள்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

2. https://myscore.cibil.com/CreditView/enrollShort_new.page?enterprise=CIBIL என்ற இணைப்பிற்கு செல்லவும்.

3. மின்னஞ்சல் ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு கணக்கை உருவாக்கவும்.

4. அதன் பின் உங்கள் பெயரை உள்ளிட்டு, பான் கார்டுக்குப் பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற மாற்று அடையாள ஆவணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

PF கணக்கு வச்சுருக்கீங்களா? UAN எண் பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களுடன்!

5. பிறந்த தேதி மற்றும் பின் குறியீட்டை பூர்த்தி செய்து மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, ‘ஏற்றுக்கொள் மற்றும் தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

6. நீங்கள் ஒரு OTP ஐப் பெறுவீர்கள், அதை நீங்கள் உள்ளிட்டு ‘தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.

7. நீங்கள் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்ட கணக்குடன் சாதனத்தை இணைக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்படும்.

8. பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்து, ‘டாஷ்போர்டுக்குச் செல்’ விருப்பத்தை கிளிக் செய்யவும், பின்னர் நீங்கள் சிபில் ஸ்கோரைப் பார்க்கலாம்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!