PF கணக்கு வச்சுருக்கீங்களா? UAN எண் பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களுடன்!
PF கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களது UAN எண்ணை அறிந்து வைத்திருப்பது கட்டாயமான ஒன்றாகும். UAN எண்ணை அறிவது எப்படி என்பது குறித்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
UAN எண்:
ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். மத்திய அரசும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். இவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு UAN என்பது முக்கியமான ஒன்றாகும். UAN என்பது Universal Account Number ஆகும். இந்த எண்ணை பயன்படுத்தி பயனர்கள் EPF கணக்கை கண்காணிக்கவும் ஆன்லைன் மூலம் சரிபார்க்கவும் முடியும். ஊழியரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட PF கணக்கு இருக்கும்பட்சத்தில் UAN ஐ பயன்படுத்தி கணக்கு குறித்த விவரங்களை ஒரே இடத்தில் பார்க்க முடியும்.
யுபிஐ பயன்படுத்துறீங்களா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
இதற்கு பயனர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான epfindia.gov.in க்குள் நுழைய வேண்டும். அதில் சேவை விருப்பத்தினை கிளிக் செய்து உறுப்பினர் UAN அல்லது ஆன்லைன் சேவைக்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து ஸ்கிரீனில் தெரியும் Know Your UAN Status என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்ததாக உறுப்பினர் ஐடி அல்லது ஆதார் எண் அல்லது பான் எண் ஏதாவது ஒன்றை உள்ளிட வேண்டும். பின்பு உங்கள் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.
அதன்பின் கேப்ட்சா டைப் செய்ய வேண்டும். அதனை தொடர்ந்து Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் சரியாக செய்யும் பட்சத்தில் யுஏஎன் ஆர்டர் வழங்கப்படும். ஊழியர்களின் 55 வயது பூர்த்தியாகும் போது PF கணக்கில் இருந்து பணத்தை பெறமுடியும். அதுமட்டுமல்லாது வீடு வாங்குதல் அல்லது கட்டுமானம், மகன் அல்லது மகள் திருமணம், கல்வி போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். பயனர்கள் தங்கள் PF பணத்தை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


























