
உங்களுக்கு கோடை காலத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கணுமா …?? அப்போ உங்க வீட்டுல உடனே இத பாலோ பண்ணுங்க
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த கோடை காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று, அதிக மின்சார கட்டணம் செலுத்துவது தான். எனவே, மின்சாரச் செலவை குறைப்பதற்கு பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை கீழே விரிவாக பார்ப்போம். அதாவது, வீட்டில் அனைத்து இடங்களிலும் எல்இடி விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதனால், மின்சார செலவு மிச்சமாகும்.
அடுத்ததாக, வீட்டில் குளிரூட்டி (ஏசி) இருந்தால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, இன்வெட்டர் இல்லாமல் ஏசி வாங்க கூடாது. மேலும், வீட்டில் ஏசி இயங்கி கொண்டிருக்கும் போது மின்விசிறியை இயக்க கூடாது. மேலும், உங்களது வீட்டில் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால், அதன் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்க வேண்டும். முக்கியமாக, வீட்டை விட்டு வெளிய செல்லும் போது மின்விசிறி மற்றும் விளக்குகள் ஆகியவற்றை மறக்காமல் அணைத்து விட்டு செல்ல வேண்டும். இவ்வாறு, இந்த அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் பின்பற்றினால், உங்களது கோடை கால மின்சாரச் செலவை மிச்சப்படுத்தலாம்.


























