
வீரர்களுடன் குடும்பத்தினர் தங்க தடை..!! அதிரடியாக எதிர்த்த விராட் கோலி..!! இதற்கு என்ன செய்ய போகிறது BCCI..?
2025 ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI) புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில், முக்கியமாக கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர் 45 நாட்களுக்கு மேல் நீடிக்கும் சுற்றுப் பயணங்களின் போது மட்டுமே அவர்களுடன் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், இந்த கால அவகாசம் 14 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் BCCI இந்த விதிமுறை குறித்து விராட் கோலி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அதாவது, “வெளிநாட்டு சுற்றுப் பயணங்களின் போது கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படாத சமயத்தில் அறைக்கு சென்று தனியாக சோகத்துடன் உட்கார விரும்பவில்லை என்றும், அழுத்தமான சூழலில் குடும்பத்துடன் இருக்கும் போது அத்தகைய ஏமாற்றத்தில் இருந்து சீக்கிரம் வெளிவர முடியும் என்று விராட் கோலி கூறியுள்ளார். மேலும், கிரிக்கெட் வீரர்களுடன் அவர்கள் குடும்பத்தினர் தங்கியிருப்பதன் மூலம் கிடைக்கும் மதிப்பை பலரும் புரிந்து கொள்ளமாட்டார்கள்” என்று BCCI விதித்த புதிய கட்டுப்பாடு குறித்து விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.

























