
TATA IPL 2025 தொடரில் வெல்லப்போவது யார்..? மீண்டும் பார்மிற்கு திரும்பும் CSK.. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் ரசிகர்கள்..
இந்தியன் பிரீமியர் லீக் (IPL), என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி ஆகும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான IPL போட்டியானது வருகின்ற மார்ச் 22 ம் தேதி தொடங்கி மே 25, 2025 வரை நீடிக்கக்கூடும் என்றும், இதில் பத்து அணிகள் இடையே 74 போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டுக்கான கோப்பையை கொல்கத்தா அணி வென்றதை தொடர்ந்து நடப்பாண்டிற்கான கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி இந்த சீசனை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பரவலாக கூறப்படும் நிலையில் அதற்கான காரணம் என்னவென்று இப்பதிவில் காண்போம்.
உங்களுக்கு கோடை காலத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கணுமா …?? அப்போ உங்க வீட்டுல உடனே இத பாலோ பண்ணுங்க
அதாவது, நடக்கவிருக்கும் 18 வது IPL சீனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடும் சென்னை அணியில் அஸ்வின், சாம் கரன், விஜய் சங்கர் என பழைய வீரர்கள் மீண்டும் அணிக்குள் ஐக்கியமாகி உள்ளனர். மேலும், ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, அன்சூல் கம்போஜ், கல்லீல் அகமது, ஷ்ரேயாஸ் கோபால், கமலேஷ் நாகர்கோட்டி என இந்திய வீரர்களின் படையும் பலமாகவே இருக்கிறது. இவர்களுடன் தோனியும் விளையாடுகிறார் என்று செய்தி வெளியானதை தொடர்ந்து வழக்கம் போல் இது அவரது கடைசி சீசனாக இருக்ககூடும் என்ற கருத்துக்கள் இணைதளங்களில் பரவ தொடங்கியுள்ளன.மேலும், நடக்கவிருக்கும் இத்தொடரில் எந்த அணி வெல்லும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

























