HAL நிறுவனத்தில் Graduate Apprentices வேலைவாய்ப்பு 2025 – 120+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 127 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 127 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் B.Com / B.Sc / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு HAL-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
- தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.05.2025 முதல் 31.05.2025ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























