டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்…!! அமலாக்க துறையினரை கண்டித்த நிலையில் அதிரடி முடிவு

0
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்...!! அமலாக்க துறையினரை கண்டித்த நிலையில் அதிரடி முடிவு
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்...!! அமலாக்க துறையினரை கண்டித்த நிலையில் அதிரடி முடிவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இருந்து நீதிபதிகள் திடீர் விலகல்…!! அமலாக்க துறையினரை கண்டித்த நிலையில் அதிரடி முடிவு

 

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் கடந்த மாதம் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும், இந்த சோதனைக்கு பின்னர் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1,000 கோடிக்கும் அதிகமான முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அமலாக்க துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு உள்துறை செயலர் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பழைய ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்.. கடைசி வாய்ப்பு வழங்கிய அரசு..

மேலும், இந்த வழக்கானது எம். எஸ் ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் ஆகிய நீதிபதிகளின் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, இதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அமலாக்க  துறையினருக்கு உத்தரவிட்டனர். மேலும், வருகின்ற மார்ச் 26 ஆம் தேதி வரை விசாரணையின் பேரில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது எந்தவித மேலாதிக்க நடவடிக்கையும் மேற்கொள்ள கூடாது என்றும்  உத்தரவிட்டனர். மேலும், அதிகாரங்களை தவறாக பயன்படுத்தியதால் அமலாக்க துறையினரை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர். இந்நிலையில், தற்போது அமலாக்க துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் உயர் அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் இருந்து விலகி கொள்வதாக நீதிபதிகள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!