பொதுமக்களே உஷார்.. வங்கக்கடலில் உருவாகும் புயல்.. கொட்டித் தீர்க்க காத்திருக்கும் கனமழை!!
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (அக்டோபர் 16) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், அது பின்னர் வடதமிழகம் நோக்கி நகரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை (அக்டோபர் 16) மிக கனமழை பெய்யும் என்றும், அதை தொடர்ந்து புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























