கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்த HDFC வங்கி… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!!
EMI “சமமான மாதாந்திர தவணை” என்பது கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறையாகும். மேலும், நிலுவையில் உள்ள கடனின் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் செலுத்த EMI பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வட்டி விகிதத்தை டிசம்பர் 07, 2024 முதல் அதிகரிக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. தற்போது உயர்த்தப்பட உள்ள இந்த வட்டி விகித செயல்முறை முன்னதாகவே நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக எச்டிஎஃப்சி வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை உச்சியில் நிச்சயம் மகா தீபம் எரியும்..!! சட்டமன்றத்தில் அறநிலைய துறை அமைச்சர் உறுதி..!!
மேலும், வங்கி எடுத்த இந்த முடிவால் எச்டிஎஃப்சி வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்களின் இஎம்ஐ அதிகரிக்கும். அதாவது வாகனக் கடன்கள், தனிநபர் கடன்கள், வீட்டுக் கடன்கள் மற்றும் பிற வகையான நுகர்வோர் கடன்களின் விகிதம் 5 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டு 9.20 சதவீத வட்டி விகிதத்தில் இருந்து 9.50 சதவீதமாக வசூலிக்கப்படும் எனவும் இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச கடன் விகிதமான MCLR யில் எந்த மாற்றமும் இல்லை என்று எச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.


























