HAL நிறுவனத்தில் Visiting Consultant வேலை – ஒரு வருகைக்கு ரூ.3,500/- || முழு விவரங்களுடன்!
HAL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Visiting consultant, Visiting Doctors பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Visiting Doctors – 4 பணியிடங்கள்
Visiting consultant – 1 பணியிடம்
Visiting consultant கல்வி தகுதி:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Visiting Doctors: MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Visiting Consultant – PG Degree / Diploma in Pathology தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
HAL வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 63, 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Visiting consultant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.1,700/- முதல் ரூ.3,500/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
HAL தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 29.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























