விஜய் டிவி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் களமிறங்கும் டிக்டாக் பிரபலம் – பிரபல நடிகர் அறிவுரை!
விஜய் டிவி பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க உள்ளதாக சமீபத்தில் டீஸர் வெளியான நிலையில், அதில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்ள உள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நடிகர் சதீஸ் அதில் கமெண்ட் செய்துள்ளார்.
பிக்பாஸ் போட்டியாளர்:
விஜய் டிவியில் மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களின் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்க உள்ளதாக சமீபத்தில் டீஸர் வெளியானது. அதில் கமல் ‘ஆரம்பிக்கலாமா’ என மாஸான விக்ரம் பட லுக்கில் வந்திருந்தார். அன்று முதல் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் தான் முக்கிய டாப்பிக்காக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஜிபி முத்து டிக்டாக் செயலி மூலமாக பிரபலமானவர்.
நெட்ஃபிளிக்ஸில் வெளியானது ‘Money Heist’ சீசன் 5 – ரசிகர்கள் உற்சாகம்!
யூடூப் சேனல் நடத்தி வரும் அவர், ஆதித்யா டிவி நிகழ்ச்சியில் முதன்முறையாக அறிமுகமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். செத்த பயலே.. நார பயலே என சொல்லி பிரபலமான அவர், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவராக வர உள்ளார். அது பற்றிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தின் பின்னால் பிக் பாஸ் என எழுதப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளது உறுதியாகி உள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் அந்த புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் சதீஸ், ”பிக்பாஸ் வீட்டில் கடிதங்களை படிக்க விட்டுவிடாதீர்கள். என்ன டாஸ்க் கொடுக்கிறீர்கள் செத்த பயலுவலா நார பயலுவலா” என நகைச்சுவையாக கருத்து கூறியுள்ளார். ஜிபி முத்து உள்ளே சென்றால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. இவரின் இந்த பதிவால் பிக்பாஸ் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வருகிற 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.