நெட்ஃபிளிக்ஸில் வெளியானது ‘Money Heist’ சீசன் 5 – ரசிகர்கள் உற்சாகம்!

0
நெட்ஃபிளிக்ஸில் வெளியானது 'Money Heist' சீசன் 5 - ரசிகர்கள் உற்சாகம்!
நெட்ஃபிளிக்ஸில் வெளியானது 'Money Heist' சீசன் 5 - ரசிகர்கள் உற்சாகம்!
நெட்ஃபிளிக்ஸில் வெளியானது ‘Money Heist’ சீசன் 5 – ரசிகர்கள் உற்சாகம்!

இதுவரை நான்கு சீசன்களாக ஒளிபரப்பான ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸின் 5 ஆவது பாகம் இன்று (செப்டம்பர் 3) நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து மணி ஹெய்ஸ்ட் சீரிஸின் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

மணி ஹெய்ஸ்ட்

தற்போதுள்ள டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் உலக நிகழ்வுகள் அனைத்தும் கையடக்க ஸ்மார்ட் போன்களுக்குள் வந்துவிட்டது. இவ்வகை டிஜிட்டல் சேவைகளின் மூலம் பல்வேறு வகையான தொழில்கள் பாதிக்கப்பட்டாலும், சேவைகள் எளிமையாக இருப்பதால் இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் OTT தளங்கள் மக்களின் அன்றாட பொழுதுபோக்கு வசதிகளை எளிதாகியுள்ளது. இந்த OTT தளம் கொரோனா பேரிடர் காலங்களில் மக்கள் பொழுதுபோக்கும் ஒரு முக்கிய இடமாக மாறியது.

விஜய் டிவி பிரபல சீரியலில் இருந்து விலகும் ரக்ஷிதா? புதிய பதிவால் ரசிகர்கள் குழப்பம்!

அந்த வகையில் OTT தளங்களில் வெளியிடப்படும் திரைப்படங்கள், வெப் தொடர்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் கொரோனா முதலாம் அலை காலத்தில் ‘மணி ஹெய்ஸ்ட்’ என்ற ஸ்பானிஷ் வெப் தொடர் உலக மக்களின் ஆதரவை பெற்றது. அதாவது உலகின் அதிநவீன பாதுகாப்புகள் அடங்கிய ‘ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயின்’ என்ற வங்கியில், புரபஸர் தலைமையில் உருவான குழு ஒன்று பணத்தை திருடுவது தான் இந்த வெப் தொடரின் முக்கிய கதையாகும். கிட்டத்தட்ட 4 சீசன்களாக வெளியான இந்த கதைக்கு மக்கள் கொடுத்த ஆதரவு அதிகம்.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் தொடரின் 5 ஆவது சீசனுக்கான ட்ரைலர் வெளியானது. அந்த ட்ரைலரில், போலீசிடம் மாட்டிக்கொண்ட புரபஸரை, இன்ஸ்பெக்டர் டார்ச்சர் செய்யும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதை தொடர்ந்து ரசிகர்கள் 5 வது சீசன் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 3 ஆம் தேதியான இன்று, மணி ஹெய்ஸ்ட் சீரிஸின் 5 ஆவது சீசன் நெட்ஃபிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!