மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – டிச.7ம் தேதி போராட்டம் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - டிச.7ம் தேதி போராட்டம் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - டிச.7ம் தேதி போராட்டம் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – டிச.7ம் தேதி போராட்டம் அறிவிப்பு!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதில் அம்மாநில அரசு காலதாமதம் செய்து வருவதால் அரசு ஊழியர் சங்கங்கள் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த போராட்டத்திற்கு 90 ஊழியர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பள உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கியுள்ளது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க சம்பள மறுவரையறை ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. ஆனால் இந்த சம்பள உயர்வை அமல்படுத்தாமல் மாநில அரசு காலம் தாழ்த்தி வருவதாக அரசு ஊழியர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பெண்களுக்கு குவைத்தில் மாதம் ரூ.32,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

அதனால் அரசு ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரும் டிச.7ம் தேதி முதல் 10ம் தேதி வரை கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. டிச.10ம் தேதி முதல் உணவு இடைவேளைகளில் அரசு அலுவலர்களை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும், டிச.16ம் தேதி தாலுகா, மண்டல அலுவலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

‘ஓமிக்ரான்’ கொரோனா வைரஸ் மாறுபாட்டின் அறிகுறிகள் என்னென்ன? மருத்துவர்கள் விளக்கம்!

மேலும் டிச.21ம் தேதி அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆந்திரா மாநில போக்குவரத்து கழக தலைமை அலுவகங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதன் பிறகும் அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடாவிட்டால் முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் டிச.27ம் தேதியும், திருப்பதியில் டிச.30ம் தேதியும், எலுருவில் ஜன.3ம் தேதியும், ஆங்கோலோவில் ஜன.6ம் தேதியும் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்திற்கு 90 ஊழியர் சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!