தங்கத்தின் விலையில் புதிய மாற்றம் – இது தான் நகை வாங்க சரியான நேரம்!!
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் சவரன் ரூ.46,960க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை:
சர்வதேச சந்தையில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றை பொருத்து ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6340க்கும், சவரனுக்கு ரூ.50,720க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், 22 ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5870க்கும், சவரனுக்கு ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
பிப். 21க்குள் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!!
மேலும், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல, சென்னையில் இன்று வெள்ளியின் விலையிலும் எந்தவித மாற்றமும் இல்லாமல் ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையில் மாற்றமில்லை என்பதால் இன்றே நகை வாங்கிக்கொள்வது சிறப்பாக இருக்கும்.