Today Gold Rate: ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…!! ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா மக்களே..??
தமிழகத்தில் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரமாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதாவது, நேற்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 80 குறைந்தது. இதனால், நகைப்பிரியர்கள் உட்பட சாமானிய மக்களும் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இன்று (18.03.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி மதுரையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து 1 சவரன் ரூ. 66,000 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,13,000 ஆகவும், 1 கிராம் ரூ. 113 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



























