Current Chief Ministers and Governors of all states in India 2025 Tamil –  Free PDF Download 

0
Current Chief Ministers and Governors of all states in India 2025 Tamil -  Free PDF Download 
Current Chief Ministers and Governors of all states in India 2025 Tamil -  Free PDF Download 

Current Chief Ministers and Governors of all states in India 2025 Tamil –  Free PDF Download 

 

Who is the Chief Minister?

முதல்வர் என்பவர் மாநில அரசின் தலைவர் ஆவார். மேலும், ஒதுக்கப்பட்ட மாநிலத்தை நிர்வகிப்பது, முக்கிய முடிவுகளை எடுப்பது மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கான மேம்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவது போன்ற பல்வேறு பொறுப்புகளை முதலமைச்சர் கையாள்கிறார். மேலும், சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெறும் ஒரு கட்சியின் தலைவர் அல்லது அக்கட்சியால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் முதல்வர் ஆகிறார். மேலும், இவரால் 5 ஆண்டுகள் வரை ஆட்சி செய்ய முடியும். 

Who is the State Governor?

மாநில ஆளுநர் என்பவர் மாநில அளவில் இயங்கி வரும் ஆட்சியை நிர்வாகம் செய்பவர் ஆவார். மேலும், இவர் இந்தியக் குடியரசுத் தலைவரால் பணியமர்த்தப்படுவார். இவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை ஆளுநர் பதவியில் இருப்பர். அவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு ஜனாதிபதி விரும்பினால் ஆளுநரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து, ஒரு ஆளுநர் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக பொறுப்பு வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Role of Chief Minister in India

இந்தியாவில், முதலமைச்சர் (CM) என்பவர் மாநில அரசாங்கத்தின் தலைவராக பொறுப்பு வகிப்பார். மேலும், அமைச்சரவை குழுவை வழிநடத்துவதற்கான நிர்வாக அதிகாரியாக செயல்படும் இவர்,  அரசாங்கத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்தல், சட்ட ஒழுங்கை பராமரித்தல், நிர்வகித்தல்  போன்ற முக்கிய பொறுப்புகளையும் கையாள்வார். இதை தொடர்ந்து, ஒரு மாநிலத்தின் தலைமை செயலாளர், தலைமை வழக்கறிஞர், மாநில பொது சேவை ஆணையத்தின் தலைவர் மற்றும் மாநில தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் போன்ற முக்கிய அதிகாரிகளின் நியமனம் குறித்து ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குவார். அத்துடன் மாநில அளவிலான அதிகாரிகளை இடமாற்றம், இடைநீக்கம் அல்லது பதவி உயர்வு அளிக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் முதலமைச்சருக்கு உண்டு.   

Role of State Governor in India

முதல்வர், மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் போது ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். மேலும், மாநிலத்தின் சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசியலமைப்பின்படி அவருக்கு நேரடியாகவோ அல்லது அவருக்குக் கீழ்ப்பட்ட அதிகாரிகள் மூலமாகவோ அவர் சட்டதிருத்தத்தை செயல்படுத்துவார். மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் ஆளுநருக்கும்  உயர்நீதிமன்ற நீதிபதியை நியமிக்கத் தகுதியுள்ள ஒருவரை மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாக நியமிக்க அதிகாரம் உண்டு. இறுதியாக குறிப்பிட்ட சில மாநிலங்களின் மசோதாக்களை ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நிறுத்திவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களின் புரிதலுக்காக, இந்தியாவின் தற்போதைய  முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் பற்றி கீழே உள்ள பதிவில் விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். 

 

List Of Static GK Topics – TNPSC/SSC CGL/RRB/ TET Free PDF Download in Tamil

 

List of Current Chief Ministers and Governors of Indian states

மாநிலங்கள்  

முதலமைச்சர் பெயர்கள்  

ஆளுநர் பெயர்கள் 

ஆந்திரப் பிரதேசம்  என். சந்திரபாபு நாயுடு  எஸ். அப்துல் நசீர்
அருணாச்சல பிரதேசம்  பெமா காண்டு  லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்
அசாம்  ஹிமந்த பிஸ்வா சர்மா  லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா
பீகார்  நிதிஷ் குமார்  ஆரிப் முகமது கான்
சத்தீஸ்கர்  விஷ்ணு தியோ சாய்  ராமேன் தேகா
கோவா  பிரமோத் சாவந்த் PS ஸ்ரீதரன் பிள்ளை
குஜராத்  பூபேந்திர படேல்  ஆச்சார்யா தேவவ்ரத்
ஹரியானா  நயாப் சிங் சைனி  பண்டாரு தத்தாத்ரேயா
ஹிமாச்சல பிரதேசம்  சுக்விந்தர் சிங் சுகு  ஷிவ் பிரதாப் சுக்லா
ஜார்கண்ட்  ஹேமந்த் சோரன்  சந்தோஷ் குமார் கங்வார்
கர்நாடகா சித்தராமையா  தாவர் சந்த் கெலாட்
கேரளா பினராயி விஜயன்  ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
மத்தியப் பிரதேசம் 

 

மோகன் யாதவ்  மங்குபாய் சாகன்பாய் படேல்
மகாராஷ்டிரா  தேவேந்திர ஃபட்னாவிஸ்  சி.பி. ராதாகிருஷ்ணன்
மணிப்பூர்  என். பிரேன் சிங்  அஜய் குமார் பல்லா
மேகாலயா  கான்ராட் கொங்கல் சங்மா  சி எச் விஜயசங்கர்
மிசோரம்  லால்துஹோமா  வி.கே சிங்
நாகாலாந்து  நெய்பியு ரியோ  லா கணேசன்
ஒடிசா  மோகன் சரண் மஞ்சி  ஹரி பாபு கம்பம்பட்டி
பஞ்சாப்  பகவந்த் மான்  குலாப் சந்த் கட்டாரியா
ராஜஸ்தான்  பஜன் லால் சர்மா  ஹரிபௌ கிசன்ராவ் பகடே
சிக்கிம்  பிரேம் சிங் தமாங்  ஓம் பிரகாஷ் மாத்தூர்
தமிழ்நாடு  மு.க.ஸ்டாலின்  ஆர்.என். ரவி
தெலுங்கானா  ரேவந்த் ரெட்டி  ஜிஷ்ணு தேவ் வர்மா
திரிபுரா  மாணிக் சஹா  இந்திரசேனா ரெட்டி நல்லு
உத்தரபிரதேசம்  யோகி ஆதித்யநாத்  ஆனந்திபென் படேல்
உத்தரகாண்ட்  ஸ்ரீ புஷ்கர் சிங் தாமி  குர்மித் சிங்
மேற்கு வங்காளம்   மம்தா பானர்ஜி  சி.வி. ஆனந்த போஸ்

 

Download PDF 

 Join ExamsDaily Whatsapp Group

1. Who has a high-power CM or Governor?

The executive power of the entire State is vested in the Governor.

2. Who elects the CM of State?

The governor appoints a chief minister through a majority in the Rajya Vidhan Sabha.

3. Who was the first woman chief minister of India?

Sucheta Kripalani was the first woman to be Chief Minister of any Indian state and served as the Chief Minister of Uttar Pradesh from 1963 to 1967.

4. Who is the first CM of India?

Pandit Govind Ballabh Pant became the CM of Uttar Pradesh in 1937.


5. Who appoints the state Governor?

The Indian President appoints the Governor for each state.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!