தங்கத்தின் விலை மீண்டும் அதிரடி சரிவு – சவரன் ரூ.45,600க்கு விற்பனை!!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை:
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்ததையடுத்து தங்கத்தின் விலை அதிரடியாய் உயர்ந்து வருகிறது. அதன்படி, நேற்று சென்னையில் நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6190க்கும், சவரனுக்கு ரூ.49,520க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 5720க்கும், சவரனுக்கு ரூ.45,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
TNPSC குருப் 4 தேர்வுக்கு ரெடியாகும் தேர்வர்களே – OFFER விலையில் சூப்பர் TEST PACK!
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது சென்னையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்திருக்கிறது. அதன்படி, இன்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6170க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.49,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 5700க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.77.70க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 70 காசுகள் குறைந்து ரூ.77க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.