ஒரே நாளில் ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை.. மக்களே தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!!

0
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா..?
நகை பிரியர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. தமிழகத்தில் இன்றைய ரேட் எவ்வளவு தெரியுமா..?

ஒரே நாளில் ரூ.70 ஆயிரத்துக்கும் குறைவாக சரிந்த தங்கம் விலை.. மக்களே தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!!

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் பொருளாதார நிலையற்ற தன்மை காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால், அது மேலும் அதிகரித்தது. பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலையானது உயர்வதும், குறைவதுமாக நிலையற்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்யும் சாமானிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

IIITDM காஞ்சிபுரத்தில் ரூ 37,000 வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள் || முழு விவரங்களுடன்

இந்நிலையில், தமிழகத்தில் நேற்று (14-05-2025) தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.8,805 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 70,440 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, “இன்று (15-05-2025) தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூ.195 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,610-க்கும், சவரனுக்கு ரூ.1560 குறைந்து, ஒரு சவரன் தங்கம் 68,660-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலையானது கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!