சொந்த தொழில் செய்யணும் ஆனா நிதி இல்லையா..?? அப்போ இந்த திட்டம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
இன்றைய போட்டி நிறைந்த உலகில் படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத காரணத்தால் பலர் சுயதொழில் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், போதுமான முதலீடு இல்லை என்பதால் அவர்களின் தொழில் தொடங்கும் முயற்சி தடைபடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் மத்திய அரசு, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தை ஏப்ரல் 8, 2015 அன்று தொடங்கபட்டு நாடு முழுவதும் உள்ள பல்வேறு மக்களுக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.
தமிழக பொதுமக்கள் கவனத்திற்கு.. நாளை (19-04-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..!!
மேலும், இந்த திட்டத்தில் தொழில் நிலையைப் பொறுத்து கடன்கள் மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அதில் “ஷிஷு பிரிவின் படி ஆரம்ப கட்டத்தில் உள்ள வணிகங்களுக்கு ரூ.50,000 வரை கடனும், கிஷோர் பிரிவின் படி வளர்ந்து வரும் வணிகங்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடனும் மற்றும் தருண் பிரிவின் படி நன்கு நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான கடன் வழங்கப்படுகிறது”.


























