மதுரை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. இன்று முதல் திருமலை நாயக்கர் மகாலுக்கான அனுமதி இலவசம் ..!!

0
????? ?????????? ??? ?????? ??????.. ????? ????? ??????? ???????? ?????????? ?????? ?????? ..!!
மதுரை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. இன்று முதல் திருமலை நாயக்கர் மகாலுக்கான அனுமதி இலவசம் ..!!

மதுரை மக்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. இன்று முதல் திருமலை நாயக்கர் மகாலுக்கான அனுமதி இலவசம் ..!!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, மன்னர் திருமலை நாயக்கரால் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும், இந்தோ-சாரசனிக் பாணியில் கட்டப்பட்ட இந்த அரண்மனையானது, பிரமாண்ட தூண்களுக்கு பெயர் பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இந்த அரண்மனையை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இந்நிலையில் இந்த அரண்மனை குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, “மதுரை திருமலை நாயக்கர் மகாலை உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இன்று (18-04-2025) முதல் ஏப்ரல் 24 ஆம் தேதி வரை, என ஒரு வாரத்திற்கு பொதுமக்கள் கட்டணமின்றி பார்வையிட தமிழக தொல்லியல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஏப்ரல் 18 மற்றும் 24 ஆகிய இரு நாட்களுக்கு மரபுசார் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!