
வங்கிகள் விதிக்கும் அதிக வட்டியை சமாளிக்க முடியலையா..?? வெறும் 1 % வட்டிக்கு கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கோங்க…!!
சில நெருக்கடியான நேரங்களில் பணத் தேவையை பூர்த்தி செய்வதற்காக பெரும்பாலானோர் கடன் வாங்குகின்றனர். அதில் மிக முக்கியமாக வங்கியில் தனிநபர் கடன் வாங்குவதே பலரின் முதல் யோசனையாக இருக்கும். இவ்வாறு வங்கியில் வாங்கும் கடனிற்கு அதிக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இந்நிலையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெறக்கூடிய ஒரு சிறப்பான திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.
அதாவது, நீங்கள் நிதி நிறுவனம் அல்லது வங்கியில் கடன் வாங்குவதற்கு பதிலாக PPF திட்டத்தில் கடன் வாங்கலாம். “PPF என்பது மத்திய அரசால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டமாகும். இந்த திட்டத்தில் செய்யும் முதலீட்டிற்கு 7.1 % வருடாந்திர வட்டி கிடைக்கிறது. இத்திட்டத்தின் மூலம் கடன் பெற அதிக ஆவணங்களை சமர்ப்பிக்க தேவையில்லை, எந்தப் பொருளையும் அடகு வைக்க வேண்டியதில்லை என கூறப்படுகிறது. மேலும், தனிநபர் கடனுடன் ஒப்பிடும்போது PPF கடனின் வட்டி விகிதம் மிகவும் குறைவு. உதாரணமாக, நீங்கள் உங்கள் PPF கணக்கில் 7.1 % வட்டி பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் வாங்கிய கடனுக்கு 8.1 % வட்டி அதாவது 1 % மட்டுமே கூடுதல் வட்டி செலுத்த வேண்டும்”. எனவே முதலீட்டாளர்கள் மத்தியில் இத்திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

























