இனி மதுரையில் 24 மணி நேரமும் விமானம் பறக்கப்போகுது..! AAI நிறுவனம் தகவல்..!!
தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாக மதுரை திகழ்வதால் அங்குள்ள விமான நிலையத்தில் 24 மணி நேரமும் விமானத்தை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில், தற்போது அதற்கு ஒரு தீர்வு கொண்டுவரப்பட்டுள்ளது . அதாவது, மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமானங்களை இயக்க இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI ) ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் மேலும் , தனியார் நிறுவனங்களுக்கு விமானங்களை இயக்க அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை.. திருப்பி அனுப்பப்பட்ட அரசு பேருந்துகள்.. முழு விவரம் உள்ளே!!


























