இனி 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் குறித்த பாடம்!

0
இனி 8ம் வகுப்பு பாட புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் குறித்த பாடம்!

8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம் பெற்றுள்ளது.

பாடப்புத்தகத்தில் முன்னாள் முதல்வர்:

தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி செய்தவர் தான் திரு.மு.க.கருணாநிதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் இறப்பு அனைவரையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் சென்னை மெரினாவில் புதைக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

TNEB TANGEDCO AE தேர்வு – பாடத்திட்டம் இதோ!

பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் “பன்முகக் கலைஞர்” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள், தமிழ் மற்றும் கலைத் துறையில் செய்த பணிகள் குறித்தும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 8ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் குறித்து இடம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கை ரிக்ஷா ஒழிப்பு திட்டம், மதிய உணவு திட்டம், சுயமரியாதை திருமண சட்டம், விலையில்லா மிதிவண்டி திட்டம் ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!