மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச கல்வி – கல்வித்துறை அறிவிப்பு!

0
மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச கல்வி - கல்வித்துறை அறிவிப்பு!
மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச கல்வி - கல்வித்துறை அறிவிப்பு!
மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச கல்வி – கல்வித்துறை அறிவிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச கல்வியை வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

இலவச கல்வி:

நாட்டில் இறுதியாக 2011 ஆம் ஆண்டு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி நாட்டில் மொத்தம் 4.8 லட்சம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர். இவர்களுக்கான கல்வி அறிவு விகிதம் 56.1 சதவீதமாக இருந்தது. தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி திருநங்கைகள் சமூக பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழுக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சமமான கல்வி உரிமையை மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்குமாறு மாநிலம் மற்றும் தேசிய கல்வி வாரியங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து? வெளியான அதிர்ச்சி தகவல்… அதிருப்தியில் ஊழியர்கள்!

இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள திருநங்கைகளுக்கு மாநிலத்தில் உள்ள பொதுப்பல்கலைக்கழகங்கள் இலவச கல்வியை வழங்குவது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் மாநில உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கலந்தாலோசித்துள்ளார். அப்போது திருநங்கைகளின் கல்விக்கான முழு கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் தங்கள் தரப்பிலிருந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் தன் சார்ந்த கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு இலவச கல்லூரி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!