மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி திட்டம் – முழு விவரங்களுடன்!

0
மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி திட்டம்

இலவச கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது.

இலவச கட்டாய கல்வி:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் சேர விரும்பும் ஏழை மாணவர்களுக்கு இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர் டி இ) சட்டம் உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எல்கேஜி அல்லது 1 ஆம் வகுப்பில் சேர்பவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SSC JE 2024: 968 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பித்து விட்டீர்களா? – முக்கிய தகவல் இதோ!

தகுதியானவர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் சென்று வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை சமர்ப்பித்து இத்திட்டத்தை பெற்று கொள்ள முடியும். விண்ணப்பதாரர்கள் பள்ளியில் இருந்து 5 கிலோ மீட்டருக்குள் இருப்பது கட்டாயமானதாகும். நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் இருக்கும்பட்சத்தில் மாணவர்கள் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது இதற்கான விண்ணப்ப பதிவானது ஏப்ரல் 22ம் தேதி தொடங்க உள்ளது. தகுதியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!