அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் – அமைச்சரவை ஆலோசனை!

0
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் - அமைச்சரவை ஆலோசனை!
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் - அமைச்சரவை ஆலோசனை!
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் – அமைச்சரவை ஆலோசனை!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரசு உடனடியாக அமல்படுத்துவதாக அறிவித்த 5 உத்தரவாதங்களை நிறைவேற்றுவது குறித்து நாளை அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

இலவச பயணம்:

கர்நாடகா மாநிலத்தில் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து, அதன்பிறகு 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு சேகரிப்பின் போது 5 முக்கிய உத்தரவாதங்களை பதவி ஏற்ற முதல் நாள் அமல்படுத்துவதாக காங்கிரஸ்  உறுதி அளித்தது.

ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்க்க வேண்டுமா? அப்போ இந்த ஆவணம் கட்டாயம் தேவை!

ஆனால் தற்போது வரை இதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், ஜூன் முதல் வாரத்தில் இந்த திட்டங்களை அமல்படுத்துவது குறித்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் ஜூன் 1ம் தேதியான நாளை அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டம் தான் அதிக எதிர்பார்ப்பை கொண்ட திடமாக உள்ளது. இந்த திட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1500 கோடி நிதி நெருக்கடி ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!