இலவச டேட்டா பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏன்? தமிழக அரசிடம் கேள்வி!!

0
இலவச டேட்டா பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏன்? தமிழக அரசிடம் கேள்வி!!
இலவச டேட்டா பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏன்? தமிழக அரசிடம் கேள்வி!!
இலவச டேட்டா பள்ளி மாணவர்களுக்கு வழங்காதது ஏன்? தமிழக அரசிடம் கேள்வி!!

தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் மூப்பட்டன. கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான இலவச இணைய வசதியை தமிழக அரசு வழங்கி உள்ளது. இதன்படி தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வழங்காததால் அவர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

இலவச இணைய சேவை:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கி 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிற பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்று வருகின்றனர்.

இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தற்போது தமிழக முதல்வர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கியுள்ளார். இதன்படி தினசரி 2ஜிபி டேட்டா என 4 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும். இதற்கான இணைய இணைப்பு அட்டைகள் வழங்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் இலவச இணையம் வழங்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர்.

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க கோரிக்கை – முதல்வர் வீடு முன்பு போராட்டம்!!

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தால் பள்ளி மாணவர்களும் ஆன்லைன் மூலமாக பாடங்கள் கற்று வருகின்றனர் அவர்களுக்கு ஏன் வழங்கவில்லை என்ற கேள்வி பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த கேள்விகளை மறைக்கவே பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் இலவச டேட்டா வழங்கப்பட்டுள்ளதாக பேச்சுவார்த்தை எழுந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!