இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

0
இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
இராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இந்திய ராணுவத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் வருகிற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி வழிமுறைகளை வெளியிட்டார். அதில் ஆட்சேர்ப்பு முகாம் நேரடியாக நடைபெறுகிறது. யாரும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்தார்.

இராணுவ ஆட்சேர்ப்பு முகாம்:

இந்திய இராணுவத்தில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் இளைஞர்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலையில் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் படி திருவண்ணாமலையில் சுற்றியுள்ள மாவட்டங்களான கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, புதுச்சேரி ஆகிய 11 இடங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த 25,000 விண்ணப்பதாரர்கள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

5 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க வேண்டும் – ஆசிரியர்கள் கூட்டமைப்பு தீர்மானம்!!

முகாமுக்கு வருபவர்களுக்கு பல்வேறு துறைகள் மூலமாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல் கௌரவ் சேத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், உட்பட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டனர்.

பாலிடெக்னிக் ஆசிரியர்கள் பணி நியமனம் வழங்க கோரிக்கை – முதல்வர் வீடு முன்பு போராட்டம்!!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, “திருவண்ணாமலையில் வருகிற 10-ஆம் தேதி முதல் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது அதில், 25000 மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் முறைகேடுகளை தடுக்க பாதுகாப்பிற்கு காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் வெளிப்படையான முறையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம். அவ்வாறு எவராவது அணுகினால் உடனே காவல் துறையில் புகார் தெரிவிக்கலாம்.

ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகை, திருக்குறள் ஓவியப்போட்டிக்கான அறிவிப்பு – உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு!!

திருவண்ணாமலையில் நடைபெறும் முகாமில் விருப்பமுள்ளவர்கள் வந்து பயன்பெறலாம். முகாமில், சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை, சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர், தொழில்நுட்பம், சிப்பாய் பொது பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், குடியுரிமை, சாதி மற்றும் பிறப்பு ஆகிய சான்றிதழ்கள், அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

பி.டெக்., இன்ஜினியரிங் பட்டங்கள் செல்லும் – தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவிப்பு!!

இந்த முகாமில் கலந்து கொள்ள அனுமதி அட்டையை வருகிற ஜனவரி 25-ம் தேதி முதல் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுமதி அட்டைகள் வழங்கப்படும். ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் 4 நாட்களுக்கு முன்பு கோவிட்-19 பரிசோதனை மேற்கொண்டு அதற்கான முடிவு சான்றிதழ் வைத்துக் கொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ளும் இளைஞர்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!