The OG GOAT.. கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு விருது.. விவரம் உள்ளே!!
உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்ஸி என்பதை நாம் அறிவோம். இவர் கடந்த ஆண்டு பிரெஞ்சு கிளப்பான PSG அணியை விட்டு வெளியேறி அமெரிக்க கால்பந்து கிளப்பான இன்டர் மியாமியில் இணைந்தார். தற்போது இவர் இன்டர்-மியாமி அணிக்காக சிறப்பாக விளையாடி அனைவரும் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
களைகட்டிய கபடி ஆட்டம்…முதல் வெற்றியை பதிவு செய்த தபாங் டெல்லி அணி!!
இந்நிலையில் இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது THE GREATEST FOOTBALL PLAYER OF ALL TIME என்ற பெயரில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸிக்கு ஸ்பெயினை சேர்ந்த பிரபல பத்திரிக்கை MARCA விருது வழங்கி கௌரவித்துள்ளது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.



























