
கிரெடிட் கார்டுகளை பாதிக்கும் UPI பரிவர்த்தனைகள்.. பண பரிமாற்றத்தை நிர்வகிக்க நிதி நிறுவனங்கள் எடுத்த அதிரடி முடிவு..
இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் புழக்கம் 1980-களில் இருந்தே நடைமுறையில் உள்ளது. இந்த கிரெடிட் கார்டுகள் வட்டியில்லா கடனை திருப்பிச் செலுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மை கொண்டுள்ளதால் மக்கள் இதை அவசர தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் டிஜிட்டல் முறை பண பரிமாற்றமான UPI (Unified Payments Interface) வருகை கிரெடிட் கார்டுகளை வெகுவாக பாதித்துள்ளது. மேலும், இந்த விதிமுறையை நிவர்த்தி செய்ய நிதி நிறுவனங்கள் கிரெடிட் கார்டுகளை, UPI உடன் இணைக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது
அதாவது, கடந்த ஆண்டு அக்டோபர் 2024-ல் UPI பயன்படுத்தி “ரூ.2.34 லட்சம் கோடி” பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது கிரெடிட் கார்டு கொடுப்பனவுகளுடன் ஒப்பிடும்போது 37% அதிகரித்துள்ளது. இந்த இடைவெளியை நிவர்த்தி செய்ய, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தும் UPI-இன் வசதியை கொண்டு கிரெடிட் கார்டுகளின் பலன்களை, பயனாளர்கள் அனுபவிக்க இந்த ஒருங்கிணைப்பானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் கிரெடிட் கார்டை UPI-யுடன் இணைக்க, “BHIM UPI” செயலியை பதிவிறக்கம் செய்யவும். அதன் பின் நீங்கள் வைத்திருக்கும் கிரெடிட் கார்டின் வங்கியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கான பிரத்தியேக UPI பின்னை அமைப்பதன் மூலம் உங்கள் UPI கணக்குடன், RuPay கிரெடிட் கார்டின் இணைப்பு உறுதி செய்யப்படும். இந்த இணைப்பை பயன்படுத்தி பயனாளர் எந்தவிதமான UPI QR குறியீட்டை வேண்டுமானாலும் ஸ்கேன் செய்து, பரிவர்த்தனைக்கான கிரெடிட் கார்டை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தலாம்.

























