உங்ககிட்ட ‘PAN’ கார்ட் இல்லையா..? அவசரமா வேணுமா.. அப்போ இத பண்ணுங்க..

0
உங்ககிட்ட 'PAN' கார்ட் இல்லையா..? அவசரமா வேணுமா.. அப்போ இத பண்ணுங்க..
உங்ககிட்ட 'PAN' கார்ட் இல்லையா..? அவசரமா வேணுமா.. அப்போ இத பண்ணுங்க..

உங்ககிட்ட ‘PAN’ கார்ட் இல்லையா..? அவசரமா வேணுமா.. அப்போ இத பண்ணுங்க..

PAN என்பது வருமான வரித் துறையால் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட ஒரு  10 இலக்க நிரந்தர கணக்கு எண் ஆகும். மேலும், உங்களது வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்தல், வங்கிக் கணக்குகளை தொடங்குதல் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாகும். இந்நிலையில் பான் கார்டு இல்லாத நபர்கள் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எவ்வாறு என்று இப்பதிவில் காண்போம்.

இனி மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ. 10,000 மாத ஓய்வூதியம்…புதிய ஓய்வூதிய திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என தகவல்

உங்களது பான் கார்டை விண்ணப்பிக்க முதலில், https://www.incometax.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வருமான வரி போர்ட்டலுக்கு சென்று “Instant e-PAN” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் தோன்றும் முகப்புப் பக்கத்தில், “Get New e-PAN” என்ற விருப்பத்தை தேர்வு செய்து உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடவும். இதை தொடர்ந்து, உங்கள் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ உள்ளிட்ட உடன் ஆதார் விவரங்களை சரிபார்த்து மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். இந்த சரிபார்ப்புக்கு பிறகு, e-PAN உருவாக்கப்பட்டு உங்களது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். மின்னஞ்சல் முகவரி கொடுக்காதவர்கள் e-filing போர்ட்டலில் உள்ள “Instant e-PAN” பகுதிக்கு சென்று “Download PAN” என்பதைக் கிளிக் செய்து உங்கள் ஆதார் எண்ணையும், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP-யையும் உள்ளிடவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் e-PAN-ஐ PDF வடிவத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!