UPSC Prelims தேர்வு எழுத போறீங்களா..?? அப்போ தவறுதலாக கூட இதை செய்துடாதீங்க..!!

0
UPSC Prelims தேர்வு எழுத போறீங்களா..?? அப்போ தவறுதலாக கூட இதை செய்துடாதீங்க..!!
UPSC Prelims தேர்வு எழுத போறீங்களா..?? அப்போ தவறுதலாக கூட இதை செய்துடாதீங்க..!!

UPSC Prelims தேர்வு எழுத போறீங்களா..?? அப்போ தவறுதலாக கூட இதை செய்துடாதீங்க..!!

சிவில் சர்வீஸ் தேர்வு என்பது மத்திய, மாநில அரசாங்கத்தில் IAS, IPS போன்ற குடிமை பணிகளை நிரப்ப நடத்தப்படும் ஒரு போட்டித் தேர்வாகும். இந்த தேர்வானது இந்திய அரசாங்கத்தால், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மூலம் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் கடினமான தேர்வுகளில் UPSC சிவில் சர்வீஸ் தேர்வானது முதலிடத்தில் உள்ளது. மேலும், 2025-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு வரும் மே 25 ஆம் தேதி தேசியளவில் நடைபெற உள்ளதால் தேர்வர்கள் தங்களை தேர்விற்கு தீவிரமாக தயார்படுத்தும் பணியில் இருப்பீர்கள். இந்நிலையில், தேர்வு எழுதுவதற்கு முன் கடைசி நேரத்தில் தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

RGNIYD-ல் ரூ 42,000 மாத ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

அதாவது, சிவில் சர்வீஸ் தேர்வு – முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. இந்த 3 தேர்வுகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு பதவி நியமனம் செய்யப்படுவார்கள். “இத்தேர்வில் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கடைசி நேரத்தில் புதிய பாடங்களை எடுத்து படிப்பதை விட, இதுவரை படித்த பாடங்களுக்கு மாதிரி தேர்வுகளை எழுதி, அதில் செய்யும் தவறுகளை சரி செய்து கொள்வது சிறந்த வழியாகும். மேலும், காலை முதல் இரவு வரை என்னென்ன பாடங்களில் பயிற்சி பெற போகிறீர்கள் என்றும், அதற்கு எவ்வளவு நேரம் எடுத்துகொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து, தேர்வு அறையில் பலர் செய்யக்கூடிய தவறு, OMR தாளில் கேள்விக்கான பதிலை மாற்றி குறிப்பது. இதை தவிர்க்க தேர்விற்கும் முன்பு OMR தாளில் முறையாக பயிற்சி பெற்றுகொள்ள வேண்டும். மேலும், தேர்விற்கான முக்கிய பாடங்களில் கவனம் செலுத்துவது எவ்வளவு முக்கியமோ, அத்துடன் நடப்பு நிகழ்வுகளை முறையாக படித்து அறிந்துகொள்வதும் அவசியம். பின்னர் மிக முக்கியமாக தேர்விற்கு தேவையான அட்மிட் கார்டு, அடையாள அட்டை, புகைப்படம் போன்றவற்றை சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக தேர்வர்கள் கடைசி நேரத்தில் ஆரோக்கியமான உணவு மற்றும் குடிநீரை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்”.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!