பெங்களூர் நகரத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்…!! கர்நாடக முதல்வர் வெளியிட்ட
இந்தியாவின் பெரு நகரங்களில் ஒன்றான பெங்களூரு அதன் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெயர் பெற்றது. மேலும், கர்நாடக அரசு பெங்களூரு நகரின் அடிப்படை உள்கட்டமைப்புக்கு முன்னுரிமை அளித்து, 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.3,000 கோடி மானியத்தை , நடப்பு ஆண்டில் ரூ.7,000 கோடியாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெங்களூர் நகரத்தில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் குறித்து கீழே விரிவாக காணலாம்.
அதாவது, “மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவாக பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகத்தின் பெயர் டாக்டர் மன்மோகன் சிங் பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம் என மாற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு ஆர்.சி. கல்லூரிகள் ஆகியவை பல்கலைக்கழகத்தின் கீழ் தொகுதிக் கல்லூரிகளாக ஒருங்கிணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்”
Follow our Instagram for more Latest Updates
.
























