காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள் – புதிய அறிவிப்பு!

0
காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள் - புதிய அறிவிப்பு!
காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள் - புதிய அறிவிப்பு!
காவல் நிலையங்களில் பெண் வரவேற்பாளர்கள் – புதிய அறிவிப்பு!

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இன்று முதல் பெண் வரவேற்பாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிவதற்ககு நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி மேஜை:

வழக்கமாக அனைத்து பொது நிறுவனங்களிலும் மக்களுக்கு உதவிபுரிவதற்காக உதவி மேஜை இருக்கும். அங்கு பணியில் உள்ளவர்கள் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்களுக்கு உள்ள சந்தேகங்கள் மற்றும் விவரங்களை வழங்குவார்கள். இந்த உதவி மேஜை சாதாரண மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், கோவை காவல்துறை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உதவி மேஜை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிவகாமி பற்றி அண்ணியிடம் புகழும் சந்தியா, மனதை வெல்வாரா? சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!

கோவை மாநகரில் உள்ள 15 சட்ட ஒழுங்கு காவல் நிலையங்கள், 3 மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் இரண்டு போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையங்கள் ஆகிய இடங்களில் பெண் காவலர்கள் இந்த பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் இந்த பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையும் என்று சுழற்சி முறையில் பணிபுரிவார்கள்.

TN Job “FB  Group” Join Now

பெண் காவல்துறை வரவேற்பாளர்களுக்கு 18 லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தினமும் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றனர். புகார் அளிப்பதற்கு வரும் பொதுமக்களிடம் பிரச்சனையை கேட்டறிந்து புகார்களை பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் மேஜையில், ‘MAY I HELP YOU?’ என்ற வாசகமும் வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!