சிவகாமி பற்றி அண்ணியிடம் புகழும் சந்தியா, மனதை வெல்வாரா? சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!

0
சிவகாமி பற்றி அண்ணியிடம் புகழும் சந்தியா, மனதை வெல்வாரா? சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!
சிவகாமி பற்றி அண்ணியிடம் புகழும் சந்தியா, மனதை வெல்வாரா? சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!
சிவகாமி பற்றி அண்ணியிடம் புகழும் சந்தியா, மனதை வெல்வாரா? சூடுபிடிக்கும் ராஜா ராணி 2!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று பூஜைக்கு அனைவரும் தயாராகின்றனர். சந்தியாவின் வீட்டில் இருந்து அனுப்பப்பட்டிருக்கும் துணிகளில் விலையை பார்த்து தெரிய வேண்டும் என்று தான் இவ்வாறாக அனுப்பி வைத்துள்ளனர் என்று பேசுகின்றனர்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சுமங்கலி பூஜையினை சிறப்பாக சரவணன் குடும்பத்தினர் நடத்துகின்றனர். பின், அனைவரும் தங்களது கணவரிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும்படி சிவகாமி கூறுகிறார். அர்ச்சனா மற்றும் சந்தியா இருவரும் தங்களது கணவரிடம் ஆசிர்வாதம் வாங்குகின்றனர்.

மாதம் ரூ.5000 பென்சன் பெற சிறந்த திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு!!

சந்தியா சரவணனின் காலில் விழப்போகும் போது சரவணன் அவரை தடுக்கிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். சிவகாமி இவை அனைத்தும் ஒரு வித சடங்கு இதனை அனைவரும் செய்தாக வேண்டும் என்று கூறுகிறார். அதனை மறுக்கும் சரவணன் சந்தியாவிற்கு அனைத்தும் தெரியும் என்றும், தான் ஆசிர்வாதம் செய்ய வேண்டியதில்லை என்று கூறுகிறார். இதனை கேட்டு சந்தியா கவலை அடைகிறார். பின், சந்தியா தனது அண்ணன் அனைவருக்கும் அனுப்பி இருக்கும் டிரஸ்களை வழங்குகிறார்.

TN Job “FB  Group” Join Now

அதனை அனைவரும் மகிழ்வுடன் பெற்று கொள்கின்றனர். அப்போது அர்ச்சனா ட்ரெஸில் உள்ள விலையை பார்த்து விட்டு வேண்டுமென்றே இது போல சந்தியாவின் அண்ணன் அனுப்பி உள்ளார் என்று கூறுகிறார். தங்களுக்கு விலை தெரிய வேண்டும் என்று நினைத்து தான் இப்படி செய்துள்ளனர் என்று சிவகாமியிடம் போட்டு விடுகிறார். இதனால் கோபம் அடையும் சிவகாமி தங்களுக்கு அப்படி ஒரு டிரஸ் தேவையில்லை என்றும் தாங்கள் சந்தியாவின் குடும்பத்தினர் அளவிற்கு வசதி படைத்தவர்கள் கிடையாது என்று கூறி விடுகிறார். ஆசையாக அனைவருக்கும் டிரஸ் எடுத்து தந்தால் இப்படி பேசி விட்டனர் என்று சந்தியா வருத்தம் அடைகிறார்.

பின், சந்தியாவிற்கு அவரது அண்ணி போன் செய்து டிரஸ் குறித்து அவர்களது வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்கிறார். அனைவரும் நன்றாக இருந்ததாக கூறியதாகவும், எனது மாமியார் மிகவும் சந்தோசம் அடைந்ததாகவும் கூறுகிறார். இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். இதனை தூரத்தில் இருந்து கேட்கும் சிவகாமி தான் சந்தியாவை அவ்வாறாக பேசியது தவறு என்று உணர்ந்து கண்ணீர் விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!