மக்களுக்கு எச்சரிக்கை..!! அதிகரித்து வரும் மோசடிகள்..!! பணத்தை பறிக்கும் கும்பல்..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்களிடம் இருந்து மோசடி செய்யும் குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அதாவது, முன்பு வங்கிகளில் இருந்து பேசுவது போல் பேசி அப்பாவி மக்களிடம் இருந்து அவர்களின் முழு வங்கி கணக்கை பற்றியும் அறிந்து கொண்டு பல மோசடிகளை செய்து வந்தனர் . அந்த வகையில், சில மாதங்களுக்கு முன்பு எல்லாம் fedex என்ற கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் தற்போது போஸ்ட் ஆபீஸில் இருந்து பேசுவதாக கூறி பல்வேறு மக்களிடம் மோசடிகளை செய்து வருகின்றனர். மேலும் , தற்போது ஒரு சில வழக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாகவும், இனி வரும் நாட்களில் fedex மோசடிகள் அதிகரிக்க கூடும் என்று நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


























