தமிழகத்தில் பருப்பு, பாமாயில் விலை உயர்வு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!!
அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட விளைச்சல் குறைவு, வரத்து பாதிப்பால் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. அதாவது விருதுநகர் சந்தையில் பாமாயில் லிட்டருக்கு ரூபாய்.19 உயர்ந்துள்ளது. இதேபோன்று சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவைகள் லிட்டருக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை..!! அதிகரித்து வரும் மோசடிகள்..!! பணத்தை பறிக்கும் கும்பல்..!!
மேலும் கடலை பருப்பு கிலோ ரூபாய்.20, துவரம் பருப்பு ரூபாய்.10, உளுந்து, சிறுபருப்பு ரூபாய்.5 உயர்ந்துள்ளது. மிளகு விலை கடந்த மாதத்தை காட்டிலும் ரூபாய். 100 அதிகரித்துள்ளது. இதேபோல் அனைத்து மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் உள்ளனர்.

























