குரூப் 1-ல் தேர்வானவர்கள் சான்றிதழ்களை ஏன் சரிபார்க்கவில்லை – டி.என்.பி.எஸ்.சி-க்கு நீதிபதிகள் கேள்வி!!

0
குரூப் 1-ல் தேர்வானவர்கள் சான்றிதழ்களை ஏன் சரிபார்க்கவில்லை- டி
குரூப் 1-ல் தேர்வானவர்கள் சான்றிதழ்களை ஏன் சரிபார்க்கவில்லை- டி
குரூப் 1-ல் தேர்வானவர்கள் சான்றிதழ்களை ஏன் சரிபார்க்கவில்லை – டி.என்.பி.எஸ்.சி-க்கு நீதிபதிகள் கேள்வி!!

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு தமிழ் வழியில் கல்லூரியில் படித்தோருக்கு, மாநில அரசுப் பணியில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ்வழி கல்வியில் தொலைதூரக்கல்வி பயின்றோருக்கு பணி வழங்கப்பட்டது குறித்து நிதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் பணிக்காக தேர்தெடுக்கப்பட்டவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி வழங்கியதற்கான காரணம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. மற்றும் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகம் விளக்கம் அளிக்க கோரி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார்.

மத்திய அரசு பணியில் இடஒதுக்கீடு:

திருமங்கலம் வழக்கறிஞர் சக்திராவ் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது,”குரூப் 1 தேர்விற்கு, டி.என்.பி.எஸ்.சி., ஜனவரி 20ல் அறிவிப்பு வெளியிட்டது. அதில் தமிழ் வழியில் படித்தோருக்கு, மாநில அரசுப் பணியில், 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கல்லுரியில் சென்று பயின்றோருக்கு மட்டும் தான் அந்த சலுகை பொருந்தும் ஆனால் தொலைதூர கல்லுரியில் பயின்ற மாணவர்களும் குரூப்1 பணிக்கு தேர்வாகிவுள்ளனர். இதனால் குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கைவிடுகிறேன்”, இவ்வாறு அந்த மனுவில் அவர் குறிப்பிட்டார்.

அந்த வழக்கினை நேற்று முன்தினம், நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அதில் டி.என்.பி.எஸ்.சி., தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும்,மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தரப்பிலும் விளக்கங்கள் முன் வைக்க கூறி வழக்கினை ஒத்திவைத்தார்.

4 ஆண்டுகளாகும் இளங்கலை பட்டப்படிப்பு – புதிய கல்வி கொள்கையால் மக்கள் அதிர்ச்சி!!

அதன்பின் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்ததில் தமிழக அரசு தரப்பிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக தரப்பிலும், டி.என்.பி.எஸ்.சி., தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதன்பின் நீதிபதிகள், ‘போலிச் சான்று பெற்றவர்களில், யாராவது பணி நியமனம் பெற்றுள்ளனரா என கண்டறிய வேண்டியுள்ளது’ எனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.

பின் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் தமிழக அரசு தரப்பில் ” பல்கலை ஒப்புதல் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து, 800 சான்றிதழ்களை சேகரித்துள்ளனர். விசாரணை, துவக்க கட்டத்தில் உள்ளது. கொரோனா ஊரடங் கால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது”. என தெரிவித்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக தரப்பில்: “தமிழகத்தில், 2,280 பேர், வெளிமாநிலங்களைச் சேர்ந்த, 2,376 பேர் படிக்காமல், கட்டணம் செலுத்தாமல், பட்டம் பெற்றதாக, 2014ல் இருந்து, மூன்று ஆண்டுகள் பட்டப் படிப்பு முடித்ததற்கான சான்று அளிக்கப்பட்டுள்ளது.ஓய்வு நீதிபதி அக்பர் அலி தலைமையிலான உயர்மட்டக்குழு விசாரணை அறிக்கை அடிப்படையில், ராஜராஜன் உட்பட சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். என தெரிவிக்கப்பட்டது. ராஜராஜன் 2017ல் தான் பணியில் சேர்ந்தார். அவருக்கும் சான்றிதழ்கள் வழங்கியதற்கும் சம்பந்தமில்லை. புகாரில் உள்நோக்கம் உள்ளது என ராஜராஜன் தரப்பில் கூறப்பட்டது.

சிவில் தேர்வு மீண்டும் நடத்த வேண்டும்- மத்திய அரசு பரிசீலினை!!!

பின்னர் பேசிய நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவங்கி, ஓராண்டிற்கு மேலாகியும் இந்த வழக்கில் முன்னேற்றம் இல்லை. வழக்கு பதிவு கூட செய்யப்படவில்லை. கல்விச் சான்றுகளை, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் டி.என்.பி.எஸ்.சி., உறுதி செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?அதற்கு எத்தகைய வழிகாட்டுதல் பின்பற்றப்படுகிறது என டி.என்.பி.எஸ்.சி., தரப்பில் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும்.என கூறிய நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!