4 ஆண்டுகளாகும் இளங்கலை பட்டப்படிப்பு – புதிய கல்வி கொள்கையால் மக்கள் அதிர்ச்சி!!

1
4 ஆண்டுகளாகும் இளங்கலை பட்டப்படிப்பு- புதிய கல்வி கொள்கையால் மக்கள்
4 ஆண்டுகளாகும் இளங்கலை பட்டப்படிப்பு- புதிய கல்வி கொள்கையால் மக்கள்
4 ஆண்டுகளாகும் இளங்கலை பட்டப்படிப்பு – புதிய கல்வி கொள்கையால் மக்கள் அதிர்ச்சி!!

மத்திய அரசு வெளியிட புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் இளங்கலை பட்டபடிப்பினை 4 ஆண்டுகள் அதிகரிப்பதற்கான திட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

புதிய கல்வி கொள்கை:

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள கல்விக் கொள்கை, 1986ல் அமல்படுத்தப்பட்டது. கடந்த, 1992ல் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 34 ஆண்டுகளாக உள்ள இந்தக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப, புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை குறித்துக் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. இக்கொள்கையை அமல்படுத்த டெல்லி பல்கலைக்கழகம், கடந்த செப்டம்பர் மாதம் குழுவொன்றை அமைத்தது. இக்குழு சார்பில் ஆலோனைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்விக் கொள்கையின்கீழ் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகளை அமல்படுத்துமாறு குழுவினரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர் பயிற்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடி பணி நியமனம் – செங்கோட்டையன் அறிவிப்பு!!

இதுகுறித்து பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது,” 4 ஆண்டு இளநிலைப் படிப்பு உள்ளிட்ட விதிமுறைகளைச் சேர்க்குமாறு குழு உறுப்பினர்களுக்கு கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. இத்திட்டத்தின்படி ஹானர்ஸ் படிப்புகள் 4 ஆண்டுகள் படிப்பாக மாற்றப்படும். 3 ஆண்டுகளை முடிக்கும் மாணவர்களுக்குப் பட்டம் கிடைக்காது.

ஹானர்ஸ் படிப்புகள் இல்லாத இலக்கியப் படிப்புகள், சிறு துறைகளும் செயல்படாது. அதேபோல இப்படிப்பில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டை முடித்துவிட்டு மாணவர்கள் வெளியேற விரும்பினால் அவர்களுக்கு முறையே சான்றிதழ் மற்றும் டிப்ளமோ பட்டம் வழங்கப்படும் இவ்வாறு கூறினார்.

சிவில் தேர்வு மீண்டும் நடத்த வேண்டும்- மத்திய அரசு பரிசீலினை!!!

ஏற்கனவே இதுகுறித்த ஏற்பாடுகள் 2014 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களில் எதிர்பால் அவை ஒத்திவைக்கப்பட்டது. எனினும் தற்போது 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பணிகள் தொடங்கியது குறித்து ஆசிரியர்கள் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. புதிய கல்வி கொள்கை எத்தனை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள் ஏற்று கொள்கிறோம், ஆனால் இதற்கு முன் படித்தவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகுரீர்கள், எத்தனை பட்டங்கள் வைத்திருக்கிறோம் தெரியுமா உங்களுக்கு பின்ன எதற்கு வேலை வாய்ப்பு அலுவலகம், அதிலும் போட்டி தேர்வு என்ற பெயரில் முறைகேடு, முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர், அவர்களை தகுதி பட்டியலில் இனி வேலை கிடைக்காத அளவிற்கு தண்டனை கொடுத்தீர்களா? மேலும் அந்த இடத்தை நிரப்ப இதுவரை என்ன செய்து இருக்கிரீர்கள்? முறைகேட்டில் ஈடுபடாமல் இருந்த அதற்கு அடுத்து குறைவான மார்க் எடுத்து தேர்வுத்துறையை மதித்து தேர்வு எழுதி வேலை கிடைத்துவிடும் என்றும் இளவம் பஞ்சு மரக்காத்த கிளிபோல் போட்டி தேர்வு வரும் போதெல்லாம் தேர்வு எழுதி எழுதி வயது முதிர்ந்து வாழ்க்கையே கல்வியில் வீணாக்கியது தான் மிச்சம் , ஒர் அளவு வகுப்பு மட்டும் படித்து விட்டு கூலி வேலைக்கு சென்றிருந்தால் கூட நல்லா சம்பாதித்து இருந்திருக்கலாம், எனக்கு வயது 42 இனிமேல் என்ன பலன் இளம் வயதில் வேலை அளிக்காத அரசு சாகும் போதா, மனிதனின் ஆயுள் காலம் எவ்வளவு என்ற அரசுக்கும் அரசை ஆளுகிறவர் களுக்கும் தெரியாதா? இனி இந்தியாவில் மட்டும் அல்ல தமிழகத்தை ஆள எத்தனை தலைவர்கள், ஆட்சியாளர்கள் வந்தாலும் படித்தவர்கள் விரக்தியில் சாகும் வரை நான் அத படிச்சி யிருக்கேன், இத படிச்சி யிருக்கேன் என்று சொல்லி கொண்டு தான் இருக்கலாம், வழியே இல்லை , படித்த படிப்பிற்கு வேலையே இல்லை பின்ன ஏன் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், எதற்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள்
    கொரோனா காலத்தில் வேலையே பார்க்காமல் சம்பளம் எல்லாமே தென் ட செலவு

    நான் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1996 முதல் இன்று 2020 வரை ரெனுவல் சரியாக புதுப்பித்து வைத்திருக்கிறேன், 24 வருடங்கள் ஆகிறது இன்று வரை வேலை வாய்ப்புக்கென்று ஒரு கடிதம் கூட வரவில்லை, வரப்போவதும் இல்லை, எதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம், அவர்களுக்கு ஏன் தென்ட சம்பளம், யாரையும் கல்வி நிறுவனம் என்ற பெயரில் வீண் அடிக்காதீர்கள், அவரவர் படித்தவுடன் வேலை கொடுப்பதாக இருந்தால் மட்டும் கல்வி கொள்கையை கொண்டு வாருங்கள்,

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1990ல் இருந்து 30 வருடமாக காத்து கிடக்கின்றவர்களுக்கு அரசு என்ன செய்ய போகுது. 1990 ல் வயது 15,
    2020-ல் 30 வருடங்களுக்கு பிறகு 45 வயது. படித்து முடித்து வேலைக்கு காத்து கிடக்கும் நபர்களுக்கு வேலை தாருங்கள் வயதே முடிய போகுது அதன் பிறகு கல்வி கொள்கை கொண்டு வாருங்கள்

    நன்றி நன்றி நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!