தமிழகத்தில் கூடுதலாக ஏரி, குளங்கள் அமைக்கப்படும்…!! அத்திக்கடவு- அவிநாசி திட்டம் குறித்து வெளியான முக்கிய தகவல்

0
??????????? ???????? ???, ???????? ?????????????...!! ???????????- ??????? ??????? ???????? ??????? ??????? ?????
தமிழகத்தில் கூடுதலாக ஏரி, குளங்கள் அமைக்கப்படும்...!! அத்திக்கடவு- அவிநாசி திட்டம் குறித்து வெளியான முக்கிய தகவல்

தமிழகத்தில் கூடுதலாக ஏரி, குளங்கள் அமைக்கப்படும்…!! அத்திக்கடவு- அவிநாசி திட்டம் குறித்து வெளியான முக்கிய தகவல்

 

“அத்திக்கடவு- அவிநாசி திட்டமானது” கடந்த 1957 ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டமாகும். அதாவது, இத்திட்டத்தின் நோக்கம், தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள வறட்சியான கிராமங்களுக்கு, பவானி ஆற்றின் உபரி நீரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு வழங்குவதே ஆகும். மேலும், 60 ஆண்டுகளாக முழுமை பெறாத இத்திட்டத்தை, கடந்த 2023 ஆம் ஆண்டு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்  8 நீரேற்று நிலையங்கள் அமைத்து நிறைவேற்றி வைத்தார்.

 IPL 2025 MI vs KKR: போட்டியில் நிலை தடுமாறிய கொல்கத்தா.. தொடர் வெற்றியை குவிக்கும் மும்பை அணி.. அஸ்வனி குமார் நிகழ்த்திய புதிய சாதனை..

மேலும், தற்போது இத்திட்டத்தின் மூலம் 1,045 கிராமங்களுக்கு நீரேற்று முறை மூலம் நிலத்தடி பைப் பொருத்தப்பட்டு, குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மேலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது  இத்திட்டத்தின் பயனாளர்களாக உள்ளனர். இந்நிலையில், தற்போது அமைச்சர் துரைமுருகன் இத்திட்டம் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் மூலம் கூடுதலாக ஏரி, குளங்கள் அமைக்கப்பட்டு, அதனுடன் சேர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!